இந்தியா

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மூட அரசு திட்டமா?: வெளியாகியுள்ள விளக்க அறிக்கை 

DIN

புது தில்லி: பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மூட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

நாட்டில் தொலைத்தொடர்பு சேவைகளில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான  பி.எஸ்.என்.எல்லும் ஒன்று. சமீபமாக பி.எஸ்.என்.எல். -ஐ  மூட மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் பரவியது. சில ஊடகங்களிளும் சமூக வலைதளங்களிலும் இந்த தகவல் அதிக அளவில் பரவியது. இதன் காரணமாக பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

இந்நிலையில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மூட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

இதுதொடர்பாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை மூட இருப்பதாக தற்போது சில ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இதுபோன்ற எந்த ஒரு திட்டமும் அரசிடம் தற்போது பரிசீலனையில் இல்லை.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

SCROLL FOR NEXT