இந்தியா

பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் மோடியே சிறந்த தலைவர்: பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா

DIN


பயங்கரவாதத்தை வேரறுப்பதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உள்ள அரசியல் துணிவு, உலகில் வேறு எந்த தலைவருக்கும் கிடையாது என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கூறினார்.
மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக சார்பில் தேர்தல் முன்னேற்பாடுகளைத் தொடங்கி வைக்க ஜெய்ப்பூருக்கு திங்கள்கிழமை வந்த அவர் கூறியதாவது:
புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக ஒட்டுமொத்த தேசமே நிற்கிறது. ராணுவ வீரர்களின் உயர்த்தியாகத்தை பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு வீண்போகச் செய்யாது. நமது ராணுவம் உரிய பதிலடி கொடுக்கும். பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்பதில், பிரதமர் நரேந்திர மோடிக்கு உள்ள அரசியல் துணிவு, உலகில் வேறு எந்த அரசியல் தலைவருக்கும் கிடையாது. 
நமது தேசத்துக்கு வலிமையான அரசுதான் தேவை. அதை, பிரதமர் மோடியைத் தவிர வேறு யாராலும் கொடுக்க முடியாது. எதிர்க்கட்சி கூட்டணி, மோடிக்கு எதிரான முழக்கத்தை வைத்தே பிரசாரம் செய்து வருகிறது. நாடு முழுவதும் 16 மாநிலங்களில் பாஜகவின் ஆட்சி நடைபெறுகிறது. வடக்கு, வடகிழக்கு மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்று வருகிறது.  
நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுதான் பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதுமட்டுமன்றி, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர ஊழலில் தொடர்புடைய இடைத்தரகர்கள் அனைவரும் இந்தியாவுக்கு நாடு கடத்தி வரப்பட்டுள்ளனர். மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டு எதுவும் இல்லை. ஆனால், முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசின் 10 ஆண்டு கால ஆட்சியில் ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது என்றார் அமித் ஷா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு: பிரியங்கா காந்தி

நீலநிற மேகமே... சதா!

பாலிவுட் சுந்தரி..!

SCROLL FOR NEXT