இந்தியா

புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

DIN


புல்வாமாவில் பிப்ரவரி 14ம் தேதி சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 49 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீர மரணம் அடைந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இந்த நிலையில் புல்வாமா தாக்குதலில் மூளையாக இருந்த பயங்கரவாதி காஸி ரஷீத் மற்றும் கம்ரான் என்ற 2 பயங்கரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளனர். இவர்கள் இருவரும் புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் என்பதும், ஜெய்ஷ்-இ-மொஹம்மது அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

கத்தாழ கண்ணால குத்தாத...!

SCROLL FOR NEXT