இந்தியா

அமித் ஷா சென்னை வருகை ரத்து: திட்டமிட்டப்படி பியூஷ் கோயல் சென்னை வருகை

DIN


அதிமுகவுடனான கூட்டணியை இறுதி செய்யும் வகையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று காலை சென்னை வருவதாக இருந்த பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு சென்னை வருகை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பியூஷ் கோயல் திட்டமிட்டப்படி சென்னை வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக தீவிரம் காட்டி வந்தது. கடந்த சில மாதங்களாக திரைமறைவில் அதிமுக - பாஜக தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர். 

கடந்த 14 ஆம் தேதி திடீரென சென்னை வந்த மத்திய ரயில்வே அமைச்சரும், தமிழக பாஜக பொறுப்பாளருமான பியூஷ் கோயல், அதிமுக அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோருடன் 3 மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக - பாஜக சார்பில் மெகா கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வமா இறுதி செய்வதற்காக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இன்று காலை 10.45 மணியளவில் சென்னை வர இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அமித் ஷா வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. 

ஆனால், திட்டமிட்டப்படி மத்திய ரயில்வே அமைச்சரும், தமிழக பாஜக பொறுப்பாளருமான பியூஷ் கோயல் இன்று சென்னை வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT