இந்தியா

புல்வாமா தாக்குதல்: ஆதாரங்களைக் கொடுக்க வேண்டியது பாகிஸ்தானிடம் அல்ல.. மாறாக!

DIN


புது தில்லி : புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் ஈடுபட்டிருப்பதை இந்தியா உறுதி செய்திருக்கும் நிலையில், பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தானிடம் இது குறித்து ஆதாரங்களை இந்தியா அளிக்க வேண்டியது இருக்கும். ஆனால் இந்த முறை, பாகிஸ்தானுக்கு எதிரான ஆதாரங்களை எல்லாம் திரட்டி இந்தியா, அந்நாட்டிடம் அளிக்க வேண்டாம் மாறாக, உலக மற்றும் அண்டை நாடுகளிடம் அந்த ஆதாரங்களை இந்தியா அளிக்க வேண்டும். அப்போதுதான் பாகிஸ்தானின் முகத்திரை கிழிக்கப்படும் என்று அரசு மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்பு பாகிஸ்தானின் உதவியோடு பயங்கரவாதிகள் நடத்திய மும்பை தாக்குதல், பதான்கோட் ராணுவ முகாம் மீதான தாக்குதல் என பல தாக்குதல்கள் தொடர்பாக இந்தியா விசாரணை நடத்தி அதில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு இருக்கும் தொடர்புக்கான ஆதாரங்களை அந்நாட்டிடம் வழங்கியதில் எந்த பயனும் ஏற்படவில்லை. 

இதையெல்லாம் கருத்தில் கொண்டு, மத்திய அரசின் மூத்த அதிகாரிகள், மத்திய அரசுக்கு தங்களது கருத்தைத் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க வேண்டிய அவசியமே இல்லை. மாறாக அனைத்து ஆதாரங்களையும், உலக நாடுகளுக்கு அளிக்க வேண்டும். இந்திய மண்ணில் பயங்கரவாதத்தைத் தூண்டிவிடும் பாகிஸ்தானின் முகத்திரையைக் கிழிக்க வேண்டியதே அவசியம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

SCROLL FOR NEXT