இந்தியா

தற்கொலைத் தாக்குதல்: எஃப்.ஏ.டி.எஃப். கண்டனம்

DIN


ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு, சர்வதேச பயங்கரவாத நிதியாதார கண்காணிப்பு அமைப்பான எஃப்.ஏ.டி.எஃப். கண்டனம் தெரிவித்துள்ளது. நிதி செயல்பாட்டு அதிரடி குழு என்பதன் சுருக்கம் எஃப்.ஏ.டி.எஃப். ஆகும்.
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் இருந்து செயல்படும் அந்த அமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஜம்மு-காஷ்மீரில் கடந்த வாரம் 40 பேரை பலி கொண்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு எஃப்.ஏ.டி.எஃப். அமைப்பு சார்பில் மிகுந்த கவலையையும், கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
பயங்கரவாதத்தை எதிர்கொள்வது தொடர்பான உத்திசார் நடவடிக்கைளில் உள்ள குறைபாடுகளை சரி செய்யும் நோக்கில் அதிரடி செயல்திட்டத்தை பாகிஸ்தான் தொடர்ந்து அமல்படுத்த வேண்டும். 
பயங்கரவாத குழுக்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாத நிதியாதார அச்சுறுத்தல்களை பாகிஸ்தான் திருத்தியமைத்துள்ளது. எனினும், ஐ.எஸ்., அல்-காய்தா, ஜமாத்-உத்-தவா, லஷ்கர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது, ஹக்கானி மற்றும் தலிபான் தொடர்புடைய பயங்கரவாத இயக்கங்களின் நிதியாதார அச்சுறுத்தல்களை பாகிஸ்தான் முறையாக புரிந்து கொள்ளவில்லை. 
பயங்கரவாத நிதியாதார அச்சுறுத்தல்கள் குறித்து அபாய எச்சரிக்கையின் அடிப்படையில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று எஃப்.ஏ.டி.எஃப். அமைப்பு தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

SCROLL FOR NEXT