முகப்பு
இந்தியா

துப்புரவுத் தொழிலாளர்களின் காலைக் கழுவிய பிரதமர் மோடி: ஏன்? எங்கே? எதற்கு?

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதிக்கு நேற்று சென்ற பிரதமர் மோடி, அங்கு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

Updated On : 25 பிப்ரவரி 2019, 10:54 am IST
பகிர்:


உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதிக்கு நேற்று சென்ற பிரதமர் மோடி, அங்கு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

கும்பமேளாவையொட்டி அப்பகுதியில் சுத்தப்படுத்தும் பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள், பாதுகாப்புப் படை வீரர்கள் ஏராளமானோர் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்களை அனைவரையும் மோடி பாராட்டினார்.
 

கும்பமேளாவில் சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்டிருந்த துப்புரவுத் தொழிலாளிகள் 5 பேரின் காலை பிரதமர் மோடி கழுவினார்.

Advertisement

Advertisement

இது பற்றி அவர் கூறுகையில், சுமார் 20 - 22 கோடி மக்கள் கூடும் ஓரிடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது என்பது மிகப்பெரிய காரியம். இந்த உலகில் எதையும் சாதிக்க முடியும் என்பதை நீங்கள் நிரூபித்துக்காட்டியுள்ளீர்கள். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மோடி தெரிவித்தார்.

முன்னதாக, திரிவேணி சங்கமத்தில் நீராடிய மோடி, நதிக்கு பால், பழம் கொண்டு அபிஷேகம் செய்து, சிவப்பு நிற ஆடையை புனித நதிக்கு வழங்கினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.