இந்தியா

ஆதார் அட்டையுடன் ஓட்டுநர் உரிமம் இணைப்பது கட்டாயமாக்கப்படும்: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

ஆதார் அட்டையுடன் ஓட்டுநர் உரிமம் இணைப்பது விரைவில் கட்டாயமாக்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை

DIN


புதுதில்லி: ஆதார் அட்டையுடன் ஓட்டுநர் உரிமம் இணைப்பது விரைவில் கட்டாயமாக்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்கள், இணையதளங்கள் உள்ளிட்டவற்றில் தகவல்கள் திருடப்படுவதைத் தடுக்க நிதித் தகவல்கள் பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. இதேபோன்று ஆதார் அட்டையுடன் மற்ற சேவைகளை இணைப்பது கட்டாயமல்ல என்று கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. 

இந்நிலையில், ஆதார் அட்டையுடன் ஓட்டுநர் உரிமத்தை இணைப்பது கட்டாயமாக்கப்படும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு தனிநபர் குறித்த விவரங்களையும் தெரிந்துகொள்ள ஆதார் எண் சமூகரீதியில் பெரிய மாறுதலை ஏற்படுத்தியுள்ளது. ஆதார் எண்ணுடன் வாகன ஓட்டுநர் உரிமம் இணைக்கப்பட உள்ளதாகவும், இதற்கான நிலுவையில் உள்ள மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்பு, ஆதாருடன் ஓட்டுநர் உரிமத்தை இணைப்பது கட்டாயமாக்கப்படும் என்றார். 

இதன்மூலம், குடிபோதையில் வாகனம் ஓட்டி, உயிரிழப்பை ஏற்படுத்திவிட்டு, வேறு மாநிலத்தில் ஓட்டுநர் உரிமம் பெறுவது போன்ற குற்றங்கள் தடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா இறந்த பொருளாதாரமா? டிரம்ப்பின் பொய்யான விமர்சனத்துக்கு அவரது நிறுவனமே சாட்சி!

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் வேலை: காலியிடங்கள்: 105

ராமேசுவரம் - பனாரஸ் ரயில் புதுக்கோட்டையில் நின்றுசெல்லும்!

பெண்கள் சேவை மையத்தில் சமூகப் பணியாளர், ஐடி உதவியாளர் வேலை!

லாக்-அப் மரணம் அல்ல!காவல் நிலையத்தில் ஒருவர் மர்ம மரணம்!நடந்தது என்ன?காவல் ஆணையர் பேட்டி!

SCROLL FOR NEXT