இந்தியா

10% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்

DIN

பொதுப் பிரிவில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவுக்கு தனது ஒப்புதலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சனிக்கிழமை அளித்துள்ளார்.
 இதுகுறித்து மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், "அரசியலமைப்பு (103ஆவது திருத்தம்) சட்டம்-2019க்கு (இட ஒதுக்கீடு மசோதா) குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்; இந்த சட்டம், மத்திய அரசு அறிவிக்கும் நாள் முதல் அமலுக்கு வரும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த மசோதா, நாடாளுமன்றத்தில் கடந்த 9ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலுக்கு அதை மத்திய அரசு அனுப்பியது. இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

கண்டநாள் முதல்..

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

SCROLL FOR NEXT