முகப்பு
இந்தியா

சென்னையிலேயே கடுங்குளிர் என்றால் இமாச்சலப்பிரதேசம் எப்படி இருக்கும் பாருங்கள்!

சென்னை மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்கள் கடுங்குளிரால் நடுங்கும் நிலையில், ஏற்கனவே நடுங்கிக் கொண்டிருக்கும் இமாச்சலப் பிரதேசத்தில் இன்று நிலைமை சற்று மேம்பட்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 6:53 AM
பகிர்:


ஷிம்லா: சென்னை மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்கள் கடுங்குளிரால் நடுங்கும் நிலையில், ஏற்கனவே நடுங்கிக் கொண்டிருக்கும் இமாச்சலப் பிரதேசத்தில் இன்று நிலைமை சற்று மேம்பட்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கேலாங் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மைனஸ் 7 டிகிரி செல்சியஸ் அளவிலேயே தொடர்ந்து குளிர்நிலை நிலவி வருகிறது. கல்பா, கின்னௌர் உள்ளிட்ட பகுதிகளில் மைனஸ் 2.6 டிகிரி செல்சியஸ் அளவில் நீடிக்கிறது.

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் ஷிம்லாவில் இன்று மைனஸ் டிகிரிக்கு வெப்பநிலை செல்லவில்லை. இன்று 4 டிகிரி செல்சியஸ் அளவில் வெப்பநிலை நிலவுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.