இந்தியா

கேரளாவுக்கு கடத்த முயன்ற 26 அரிய வகைப் பறவைகள் பறிமுதல்: 8 பேர் கைது

DIN

கேரளாவுக்கு கடத்த முயன்ற 26 அரிய வகைப் பறவைகளை எல்லையோரப் பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர். 

முன்னதாக, மிசோராமில் உள்ள கம்ரங் எனுமிடத்தில் அரிய வகைப் பறவைகள் கேரளாவுக்கு கடத்தப்பட உள்ளதாக அப்பகுதி வருவாய் ஆணையர் மற்றும் எல்லையோரப் பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அங்கு நடத்திய தேடுதல் வேட்டையில் வெளிநாடுகளைச் சேர்ந்த 26 அரிய வகைப் பறவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த சந்தை மதிப்பு ரூ.28 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கேரளாவைச் சேர்ந்த 4 பேர் மற்றும் மிசோராமைச் சேர்ந்த 4 பேர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

SCROLL FOR NEXT