இந்தியா

உள்ளாட்சி தேர்தல் வழக்கு: அக்டோபர் 31ம் தேதி வரை அவகாசம் கேட்கும் மாநில தேர்தல் ஆணையம்

DIN


புது தில்லி: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில், தேர்தலை நடத்த அக்டோபர் 31ம் தேதி வரை அவகாசம் கேட்டு மாநில தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வலியுறுத்தி, உச்ச நீதிமன்றத்தில் திமுகவினர் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இன்று தாக்கல் செய்த பதில் மனுவில் மேலும் 4 மாதங்களுக்கு கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.

இதன் மூலம், அடுத்த 4 மாதங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் கிடையாது என்பது திட்டவட்டமாகியுள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பு என்பது இல்லாததால், வறட்சி மற்றும் நிவாரணப் பணிகளில் தொய்வு ஏற்பட்டிருக்கும் நிலையில், மேலும் 4 மாதங்கள் அவகாசம் கேட்டு மாநில தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!

"அவமானத்துக்குரிய மௌனத்தையே மோடி கடைபிடிக்கிறார்": ராகுல் | செய்திகள்: சிலவரிகளில் | 01.05.2024

மறுபடியும் டாஸ் தோல்வி: சிஎஸ்கே பேட்டிங்; அணியில் 2 மாற்றங்கள்!

சந்திரசேகர் ராவ் பிரசாரத்தில் ஈடுபடத் தேர்தல் ஆணையம் தடை!

பூர்ணிமை..!

SCROLL FOR NEXT