இந்தியா

மார்பகப் புற்றுநோயை கண்டறியும் "அங்கி'!

DIN

மார்பகப் புற்றுநோயை எளிதில் கண்டறிவதற்கான "அங்கி'யை (ஜாக்கெட்) மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டது.

மகாராஷ்டிர மாநிலம், அகோலா மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மார்பகப் புற்றுநோயை எளிய முறையில் கண்டறிவதற்கான "அங்கி'யை மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் சஞ்சய் தோத்ரே வெளியிட்டார். இதை அகோலா மாவட்ட பெண்கள் மருத்துவமனை மருத்துவர்கள் பெற்றுக்கொண்டனர்.

இது தொடர்பாக தோத்ரே கூறுகையில், ""மார்பகப் புற்றுநோயைக் கண்டறிவதற்கு எளிய முறையிலான, எளிதில் உபயோகப்படுத்தக் கூடியதாக இந்த அங்கி இருக்கும்'' என்றார்.

புற்றுநோய் என்பது உடலின் குறிப்பிட்ட பகுதியிலுள்ள "செல்'களின் எண்ணிக்கை அசாதாரண நிலையில் பல்கிப் பெருகுவதாகும். அப்படி "செல்'களின் எண்ணிக்கை அதிக அளவில் அதிகரிக்கும்போது, அப்பகுதியில் ரத்தஓட்டம் அதிகமாகக் காணப்படும். இதனால், அந்தப் பகுதியில் மட்டும் வெப்பநிலையானது, உடலின் வழக்கமான வெப்பநிலையை விட அதிகமாகக் காணப்படும்.

இந்த அங்கியானது, உடலின் வெப்பநிலையைப் பதிவுசெய்யும் தொழில்நுட்பத்தில் இயங்கக் கூடியதாகும். 

மார்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்ள விரும்புவோர், இந்த அங்கியை மார்பகப் பகுதியில் அணிந்துகொள்ள வேண்டும். அப்போது, மார்பகப் பகுதியின் வெப்பநிலையை இந்த அங்கி பதிவுசெய்து கொள்ளும். மார்பகப் பகுதியில் உடலின் வழக்கமான வெப்பநிலையை விட அதிக அளவில் வெப்பநிலை காணப்பட்டால், அவர்களுக்குப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.

இந்த அங்கி தொடர்பாக, மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலர் அஜய் சாஹனி கூறுகையில், ""ஜப்பானிய நிறுவனம் ஒன்றின் உதவியுடன் "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் கீழ் இந்த அங்கி தயாரிக்கப்பட்டது'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

SCROLL FOR NEXT