இந்தியா

வரும் திங்களன்று நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் 

வரும் திங்களன்று நாடு முழுவதும் அனைத்து மருத்துவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

DIN

புது தில்லி: வரும் திங்களன்று நாடுமுழுவதும் அனைத்து மருத்துவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய மருத்துவர்கள் சங்கம் வெள்ளியன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கொல்கத்தாவில் அரசு மருத்துவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து வரும் 17-ம் தேதி நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் என அனைத்து மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

அத்தியாவசிய சேவைப்பணியில் இல்லாத மருத்துவர்கள் அன்று நாள் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். அதேபோல் எங்களது எதிர்ப்பைத் தெரிவிக்க வரும் 15, 16-ம் தேதிகளில் கறுப்பு பட்டை அணிந்து பணியாற்றவும், தர்ணா, அமைதிப்பேரணி நடத்தவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

இந்த நாட்களில் போராட்டம் நடைபெறும் தேதிகளில் அவசர சிகிச்சைப்பிரிவு தொடர்ந்து இயங்கும்.

இந்தப் போராட்டங்கள் திங்கள்கிழமை வரை தொடரும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT