இந்தியா

சம்பளம் கொடுக்கவும் பணமில்லை: மத்திய அரசிடம் உதவி கோரும் பிஎஸ்என்எல்

DIN

ஊழியர்களுக்கு ஜூன் மாத ஊதியத்தை அளிக்கவும் பணமில்லை; நிர்வாகத்தை நடத்தவே முடியாத நிலையில் பிஎஸ்என்எல் பொதுத் துறை நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது.

மத்திய அரசு உடனடியாக நிதி வழங்கி, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.850 கோடி ஊதிய நிலுவைத் தொகையையும், ரூ.13 ஆயிரம் கோடி இதர கடன்களையும் திரும்ப வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு உடனடியாக நிதி வழங்காவிட்டால், பிஎஸ்என்எல் நிறுவனத்தை இயக்குவதே கேள்விக்குறியாகிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு புத்துயிர் கொடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நிறுவனத்தின் பொறியாளர்கள் கடந்த வாரம் கடிதம் எழுதியுள்ளனர்.

இதுகுறித்து மோடிக்கு அனைத்து இந்திய பொறியாளர்கள் மற்றும் தொலைத் தொடர்பு அதிகாரிகள் சங்கம் கடந்த 18ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு அதிகரித்து வருவது, நஷ்டம் இல்லாத நிதிநிலை உள்ளிட்டவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு புத்துயிர் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மூலதனம் இல்லாததால் சேவை பராமரிப்பு உள்ளிட்டவை பாதிக்கப்படுகிறது. ஆதலால் பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கி, பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு உதவ வேண்டும். இப்படி செய்வதால் லாபத்தில் இயங்கும் தொலைத் தொடர்பு நிறுவனங்களில் பிஎஸ்என்எல் நிறுவனமும் ஒன்றாக முடியும். சரிவர செயல்படாத பிஎஸ்என்எல் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், சிறப்பாக செயல்படும் ஊழியர்களுக்கு விருது கொடுத்து கௌரவிக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தொலைத் தொடர்பு நிறுவனங்களான எம்டிஎன்எல், தில்லி மற்றும் மும்பையிலும், பிஎஸ்என்எல் நிறுவனம் எஞ்சிய 20 தொலைத் தொடர்பு பகுதிகளிலும் சேவை வழங்கி வருகின்றன. இதில் எம்டிஎன்எல் நிறுவனம் தொடர்ந்து நஷ்ட கணக்கை தாக்கல் செய்து வருகிறது. 

அதே நேரத்தில் பிஎஸ்என்எல் நிறுவனமோ, கடந்த 2014-15ஆம் ஆண்டில் ரூ.672 கோடியும், கடந்த 2015-16ஆம் ஆண்டில் ரூ.3,885 கோடியும், கடந்த 2016-17ஆம் ஆண்டில் ரூ.1,684 கோடியும் லாப கணக்கை தாக்கல் செய்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT