இந்தியா

தடை அதை உடை: மாற்றுத்திறனாளி பெண், வழக்குரைஞர் ஆனதன் பின்னணியில் கண்ணீர் கதை

DIN

தடை என்றாலே உடைக்கத்தானே என்ற வார்த்தைகளை உண்மையாக்கும் வகையில் புதிய சாதனை படைக்க வேண்டும் என்ற உந்துதலோடு பல சவால்களை எதிர்கொண்டு இன்று வழக்குரைஞராகியுள்ளார் கேரளாவைச் சேர்ந்த பிரமிதா.

உடல் வளர்ச்சியில் மாற்றுத் திறனாளியான 28 வயது பெண் பிரமிதா, எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர். இவர் கேரள உயர் நீதிமன்றத்தின் வழக்குரைஞராக பதிவு பெற்றுள்ளார். 

இவர் வழக்குரைஞராக பதிவு பெற உடல்நிலை மட்டுமல்ல, பொருளாதார நிலையும், கேரளாவை புரட்டிப்போட்ட வெள்ளமும் கூட சவால்களாக மாறின.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இருந்து.. 

எர்ணாகுளத்தில் உள்ள அரசு கட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றி பிரமிதா, 3.5 அடி உயரம் கொண்டவர். உயரம் காணரமாக பள்ளி நாட்கள் முதல் உடன் பயிலும் மாணவர்களால் கிண்டல், கேலிக்கு உள்ளான பிரமிதாவின் எலும்புகளும் பலவீனமாக இருந்ததால், எந்த கடினமான பணியையும் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். அவ்வளவு ஏன், மற்றவர்களைப் போல அமர்ந்து தேர்வெழுத முடியாமல் போனதுதான் எனது சிக்கலே என்கிறார்.

விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பிரமிதாவின் பெற்றோரும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால், குடும்பத்தில் பொருளாதாரச் சிக்கலுக்கு அளவே இல்லை.

எத்தனை தடைகள் இருந்தாலும் எனது கனவை நனவாக்குவதில் என் பெற்றோரும் முனைப்போடு இருந்தார்கள்.

கடனைக் கட்ட முடியாமல் எனது குடும்பம் பட்ட கஷ்டத்தைப் பார்த்துத்தான் வழக்குரைஞர் ஆக வேண்டும் என்று விரும்பினேன் என்கிறார் பிரமிதா.

அது மட்டுமா, சோதனை மேல் சோதனை என்பார்களே அதுபோல கடந்த ஆண்டு கேரளாவைத் தாக்கிய வெள்ளம் இவர்கள் வீட்டை விட்டு வைக்கவில்லை. தற்போது அவர்கள் வசித்த அந்த இடத்தில் நிவாரணப் பணிகளினால் ஒரு சிறிய வீடு கட்டித் தரப்பட்டுள்ளது. அதில்தான் பிரமிதா மற்றும் குடும்பத்தினர் தங்கியுள்ளனர்.

இப்படி பல்வேறு தடைகள் ஏற்பட்ட போதும், அவர் மனம் தளராமல் தனது லட்சியத்தைத் தொட்டுள்ளார். இனி தனது பணியை நியாயமான முறையில் தொடர்வதே அவரது அடுத்த லட்சியமாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT