vote 
இந்தியா

தொடர் விடுமுறை: தேர்தலில் பதிவாகும் வாக்கு சதவீதத்தை பாதிக்குமா? 

17-வது மக்களவைக்கு ஏப்ரல் 11 முதல் மே 19-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது என்றும் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40

DIN

17-வது மக்களவைக்கு ஏப்ரல் 11 முதல் மே 19-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது என்றும் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்றும் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் மே 23-ஆம் தேதி எண்ணப்படும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். 

 தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகள் உள்பட சில மாநிலங்களில் காலியாக உள்ள பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தலும் அந்தந்த மாநிலங்களில் நடைபெறும் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து நடைபெறுகிறது.

 மேலும், ஆந்திரம், அருணாசலப் பிரதேசம், ஒடிஸா, சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப் பேரவைத் தேர்தலும் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து நடைபெறும் என்றும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தல் மக்களவைத் தேர்தலுடன் சேர்ந்து நடைபெறாது என்றும் தெரிவித்துள்ளார். 

 இந்தநிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு 2வது கட்டமாக ஏப்ரல் 18 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்ட்டுள்ளது. வாக்குப்பதிவு தினத்தன்று பொது விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முதல்நாள்(ஏப்.17) மகாவீர் ஜெயந்தி அன்று அரசு விடுமுறை நாளாகும். அதேபோன்று வாக்குப்பதிவுக்கு அடுத்த நாள் (ஏப்.19) புனித வெள்ளி தினத்தை அடுத்து அன்றும் அரசு விடுமுறை விடப்படும். தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என வார விடுமுறைகள் வருவதால், 5 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. 

 இதுபோன்ற தொடர் விடுமுறைகள் வந்தால் பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புவது வழக்கம். வரும் மக்களவை, இடைத்தேர்தல் வாக்குப்பதிவுகள் அன்றும் 5 நாட்கள் தொடர்விடுமுறை வருவதால், அன்றும் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, பொதுமக்களான வாக்காளர்களின் இந்தப் பயணம் அன்றைய தினம் பதிவாக உள்ள வாக்கு சதவீதத்தை பாதிக்கும் என்ற நிலை உருவாகி உள்ளதால், அரசியல் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘வாக்குக்த் திருட்டு’க்கு எதிராக பிகாா் மண்ணிலிருந்து நேரடி போராட்டம்: ராகுல்

தூய்மைப் பணியாளா்களுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்

பழனியில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்பு

பிறவிக் குறைபாடு: 5 வயது குழந்தைக்கு தலை ஓடு சீரமைப்பு

இடும்பன்குளத்தில் மீன்கள் இறந்து மிதப்பு

SCROLL FOR NEXT