இந்தியா

ராகுல் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார் ஹார்திக் படேல்

குஜராத் நிகழ்ச்சியின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் முன்னிலையில் அக்கட்சியில் ஹார்திக் படேல் இணைந்தார். 

ANI

குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகரில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதையடுத்து காந்திநகரில் காங்கிரஸ் கட்சியின் பிரமாண்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், குஜராத் நிகழ்ச்சியின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் முன்னிலையில் அக்கட்சியில் ஹார்திக் படேல் இணைந்தார். 

இதுகுறித்து ஹார்திக் படேல் கூறுகையில், நாட்டுக்கும், சமூகத்துக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற விருப்பத்துக்கு வடிவம் கொடுக்கும் வகையில், காங்கிரஸ் கட்சியில் ராகுல், மூத்த தலைவர்கள் முன்னிலையில் சேர்ந்துள்ளேன். 125 கோடி மக்களுக்கு சேவை செய்யவே இந்த முடிவை எடுத்திருக்கிறேன். 

இந்தியாவை வலுப்படுத்தும் பணியை செய்து வந்த காங்கிரஸ் கட்சியில் நேரு, இந்திரா, ராஜீவ் ஆகியோருக்கு அடுத்து ராகுல் திறம்பட செயல்படுகிறார். வருகிற மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடும் தொகுதி குறித்து காங்கிரஸ் கட்சி அறிவிக்கும் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT