இந்தியா

ஏழுமலையான் தரிசனம் நாளை 5 மணி நேரம் ரத்து

திருமலையில் வரும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 2), கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளதை முன்னிட்டு ஏழுமலையான் தரிசனம் 5 மணிநேரம் ரத்து செய்யப்படுகிறது.

DIN

திருமலையில் வரும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 2), கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளதை முன்னிட்டு ஏழுமலையான் தரிசனம் 5 மணிநேரம் ரத்து செய்யப்படுகிறது. ஏழுமலையான் கோயிலில், உகாதி எனப்படும் தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு, வரும் 6-ஆம் தேதி ஆஸ்தானம் என்ற சடங்கு நடைபெற உள்ளது. எனவே அதற்கு முன்பு வரும் செவ்வாய்க்கிழமையான 2-ஆம் தேதி, கோயில் கருவறை முதல் மகாதுவாரப் பகுதி வரை சுத்தம் செய்யப்பட உள்ளது. "கோயில் ஆழ்வார் திருமஞ்சனம்' எனப்படும் இந்த சுத்திகரிப்புப் பணிக்காக அன்று காலை 6 முதல் 11 மணி வரை ஐந்து மணி நேரத்துக்கு ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. 
அன்று காலை சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை உள்ளிட்ட சேவைகள் ஏழுமலையானுக்கு தனிமையில் நடத்தப்படும். பிறகு ஏழுமலையானுக்கு முறையாக பூஜைகள் செய்த பின் பக்தர்கள், சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT