இந்தியா

பினராயி விஜயனுடன் சந்திரசேகர் ராவ் சந்திப்பு

DIN


கேரள முதல்வர் பினராயி விஜயனை தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவரும், தெலங்கானா முதல்வருமான சந்திரசேகர் ராவ் திங்கள்கிழமை மாலை சந்தித்துப் பேசினார்.
திருவனந்தபுரத்தில் உள்ள பினராயி விஜயனின் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் இருவரும் ஆலோசனை நடத்தினர். அதுகுறித்த விவரம் வெளியிடப்படவில்லை. தேசிய அளவில்  பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத கூட்டணியை ஏற்படுத்தும் முயற்சியில் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், பினராயி விஜயனை அவர் சந்தித்துப் பேசியது முக்கியத்துவம் பெறுகிறது. கேரளத்தில் சந்திரசேகர் ராவ் 2 நாள்கள் பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடைய மனைவி, 2 பேரக் குழந்தைகளுடன் உடன் சென்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, தமிழகத்துக்கு சந்திரசேகர் ராவ் வரவுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT