இந்தியா

பிரதமராகும் வாய்ப்புக் கிடைத்தால்.. மனதில் இருப்பதை போட்டுடைத்த தலைவர்!

DIN


ஒருவேளை தனக்கு பிரதமராகும் வாய்ப்புக் கிடைத்தால் என்று அரசியல் தலைவர் ஒருவர் தனது மனதில் இருந்த விருப்பத்தை நேரடியாக அரசியல் மேடையில் வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் வேறுயாருமல்ல, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிதான்.

அம்பேத்கர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிராசாரக் கூட்டத்தில் பேசிய மாயாவதி, ஒரு வேளை எல்லாம் நல்லபடியாக நடந்து, நான் பிரதமராகும் வாய்ப்புக் கிடைத்தால் நிச்சயம் அம்பேத்கர் நகர் மக்களவைத் தொகுதியில் இருந்துதான் போட்டியிடுவேன் என்று கூறியுள்ளார்.

அம்பேத்கர் நகர் தொகுதியில் மாயாவதி 1989, 1998, 1999, 2004ம் ஆண்டு என நான்கு முறை வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றவர்.

இந்த பிரசாரக் கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு கட்-அவுட்டில் நாடாளுமன்றத்துக்கு வெளியே மாயாவதி நிற்பது போன்ற படம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: பெரும்பான்மை இடங்களில் தேஜகூ முன்னிலை

மக்களவைத் தேர்தல் நேரலை: பெரும்பான்மை இடங்களில் தேஜகூ முன்னிலை

ஒடிசாவில் ஆட்சியை பிடிக்கிறது பாஜக!

ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மோடி முன்னிலை!

பிகார் நிலவரம் என்ன? இந்தியா கூட்டணி பின்னடைவு!

SCROLL FOR NEXT