இந்தியா

பிரதமரானால் அம்பேத்கர் நகரில்தான் போட்டியிடுவேன்: மாயாவதி

DIN


நாட்டின் பிரதமரானால், அம்பேத்கர் நகர் மக்களவைத் தொகுதியில்தான் போட்டியிடுவேன் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி திங்கள்கிழமை தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம், அம்பேத்கர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், இதுகுறித்து அவர் பேசியதாவது:
நமோ நமோ என்று கோஷமிடப்பட்ட காலம் முடிந்து விட்டது. ஜெய் பீம் என்று கோஷமிடுவோருக்கான நேரம் வந்துள்ளது.
உத்தரப் பிரதேச முதல்வராக கடந்த 1995ஆம் ஆண்டில் முதல்முறையாக நான் பதவியேற்றபோது, சட்டப் பேரவை உறுப்பினராகவோ அல்லது சட்டமேலவை உறுப்பினராகவோ இல்லை. அதேபோல், நாட்டின் பிரதமராகவோ அல்லது மத்திய அமைச்சராகவோ யாரேனும் பதவியேற்றால், அவ்வாறு பதவியேற்ற நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்று சட்டம் உள்ளது. ஆதலால் மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடாததை நினைத்து, கட்சியினர் யாரும் வேதனைப்பட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.
நினைத்தது அனைத்தும் சுமுகமாக நடைபெற்றால், அம்பேத்கர் நகர் மக்களவைத் தொகுதியில் நான் போட்டியிடுவேன். ஏனெனில், தேசிய அரசியலுக்கான பாதை, அம்பேத்கர் நகர் வழியாகத்தான் செல்கிறது என்றார் மாயாவதி.
சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், மாயாவதிக்கு எப்போதும் எனது ஆதரவு உண்டு என்றார்.
63 வயதாகும் மாயாவதி, அம்பேத்கர் நகர் தொகுதியில் (முன்பு அக்பர்பூர்) இருந்து கடந்த 1989, 1998, 1999, 2004ஆம் ஆண்டுகளில் மக்களவைக்கு எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
கடந்த மார்ச் மாதமும், பிரதமர் பதவிக்கான போட்டியில் தாம் இருப்பதை மாயாவதி சூசகமாக தெரிவித்திருந்தார். அதையடுத்து 2ஆவது முறையாக பிரதமராக வேண்டும் என்ற தனது விருப்பத்தை அவர் தற்போது வெளியிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

SCROLL FOR NEXT