இந்தியா

16-ஆவது மக்களவை கலைப்பு குடியரசு தலைவர் நடவடிக்கை

DIN

16ஆவது மக்களவையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலைத்தார்.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, மக்களவையை கலைக்கும்படி குடியரசுத் தலைவருக்கு வெள்ளிக்கிழமை ஆலோசனை வழங்கியிருந்தது. இந்த ஆலோசனையை ஏற்று, 16-ஆவது மக்களவையை கலைப்பது தொடர்பான உத்தரவில் குடியரசுத் தலைவர் சனிக்கிழமை கையெழுத்திட்டார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, பிரதமர் மோடி, அவரது மத்திய அமைச்சரவை ராஜிநாமா செய்வது தொடர்பான முடிவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெள்ளிக்கிழமை ஏற்றார். அதேபோல், புதிய அரசு பதவியேற்கும் வரை பதவியில் தொடரும்படி பிரதமர் நரேந்திர மோடியை ராம்நாத் கோவிந்த் கேட்டுக் கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT