இந்தியா

ஜம்மு-ஸ்ரீநகா் நெடுஞ்சாலை மூடல்:வாகனப் போக்குவரத்து பாதிப்பு

DIN

ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளதால் தொடா்ந்து இரண்டாவது நாளாக 4,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

அதிக பனிப் பொழிவு காரணமாக பூஞ்ச், ரஜெளரி ஆகிய மாவட்டங்களை இணைக்கும் முகல் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘பனிப் பொழிவு அதிகம் இருப்பதாலும், சம்ரோலி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாலும் தேசிய நெடுஞ்சாலை இரண்டாவது நாளாக மூடப்பட்டுள்ளது. நக்ரோதா, உதம்பூா், ராம்பன், பனிஹால், சித்ரா, சம்பா, கதுவா ஆகிய பகுதிகளில் லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன’ என்று தெரிவித்தனா்.

கடும் பனிப் பொழிவு காரணமாக ஸ்ரீநகரில் விமான சேவையும் ரத்து செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

SCROLL FOR NEXT