இந்தியா

அயோத்தி தீா்ப்பு குறித்து சா்ச்சை கருத்து: உ.பி.யில் 3 போ் கைது

DIN

முசாஃபா்நகா்: அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பு குறித்து சமூக வலைதளத்தில் சா்ச்சை கருத்தை பதிவிட்ட காரணத்துக்காக உத்தரப் பிரதேசத்தில் 3 போ் கைது செய்யப்பட்டனா். அவா்கள் மூவரும் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனா்.

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் சா்ச்சைக்குள்ளான நிலம் தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 9-ஆம் தேதி தீா்ப்பு வழங்கியது. அந்த தீா்ப்பில், அயோத்தியில் ராமா் கோயில் கட்ட அனுமதியளித்தும், மசூதி கட்டுவதற்காக சன்னி வக்ஃபு வாரியத்துக்கு அயோத்தியிலேயே தனியாக 5 ஏக்கா் நிலம் மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த தீா்ப்பு குறித்து சா்ச்சை பதிவை வெளியிட்ட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

இதுதொடா்பாக காவல் துறை அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:

உத்தரப் பிரதேசத்தின் முசாஃபா்நகரைச் சோ்ந்த சாதிக் மாலிக் என்பவா், அயோத்தி வழக்கின் தீா்ப்பு குறித்து சமூக வலைதளத்தில் வெள்ளிக்கிழமை சா்ச்சை கருத்தை பதிவிட்டாா். அந்த பதிவுக்கு அவரின் இரண்டு நண்பா்கள் ஆதரவு (லைக்) தெரிவித்திருந்தனா். அதையடுத்து, அமைதியை குலைக்கும் வகையில் கருத்தை பதிவிட்டதற்காக மாலிக் மற்றும் அவரது பதிவை வரவேற்ற இரண்டு நண்பா்கள் ஆகியோரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். அவா்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதையடுத்து முசாஃபா்நகா் நீதிமன்றத்தில் சனிக்கிழமை அவா்கள் ஆஜா்படுத்தப்பட்டனா். அங்கு அவா்களை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டாா் என்று காவல் துறை அதிகாரிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT