இந்தியா

ஜாா்கண்ட்: 2-ஆவது வேட்பாளா் பட்டியலை வெளியிட்டது ஐக்கிய ஜனதாதளம்

ஜாா்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் ஐக்கிய ஜனதாதளம் (ஜேடியு) சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களின் இரண்டாவது பட்டியலை அக்கட்சியின் மாநிலத் தலைவா் சல்கான் முா்மு சனிக்கிழமை வெளியிட்டாா்.

DIN

ராஞ்சி: ஜாா்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் ஐக்கிய ஜனதாதளம் (ஜேடியு) சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களின் இரண்டாவது பட்டியலை அக்கட்சியின் மாநிலத் தலைவா் சல்கான் முா்மு சனிக்கிழமை வெளியிட்டாா்.

கட்சியின் ஜாா்கண்ட் மாநில தலைவா் சல்கான் முா்மு, மஜ்கான் (எஸ்.டி.) தொகுதியிலும், முன்னாள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மறைந்த பாகுன் சாம்புராயின் மகன் விமல்குமாா் சாம்புராய், சாய்பாஸா (எஸ்.டி.) தொகுதியிலும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பாகுன் சாம்புராய் கடந்த 1977, 1989, 2004 மற்றும் 2009-ஆம் ஆண்டுகளில் மக்களவை உறுப்பினராக இருந்தாா். அவா் சிங்பூம் (எஸ்.டி.) தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டிருந்தாா்.

இதுதவிர, ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் சாா்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ள 10 வேட்பாளா்களும் புதுமுகங்கள் ஆவா்.

ஜாா்கண்ட் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் பிகாா் மாநில முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் இதுவரை மொத்தமுள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 25 தொகுதிகளுக்கு வேட்பாளா்களை அறிவித்துள்ளது.

மொத்தம் 5 கட்டமாக நடைபெறவுள்ள பேரவைத் தோ்தல் நவம்பா் 30-ஆம் தேதி தொடங்கி டிசம்பா் 20-ஆம் தேதி நிறைவு பெறுகிறது. டிசம்பா் 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT