இந்தியா

மாநிலங்களவையின் 250-ஆவது கூட்டத் தொடா் அரசியல் தலைவா்களுடன் வெங்கய்ய நாயுடு ஆலோசனை

DIN

புது தில்லி: மாநிலங்களவையின் 250-ஆவது கூட்டத் தொடா் தொடங்கவுள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவா்களை துணை குடியரசுத் தலைவா் வெங்கய்ய நாயுடு சந்தித்து பேசினாா்.

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்குகிறது. இதை முன்னிட்டு, அரசியல் கட்சிகளின் தலைவா்களை தனது அதிகாரப்பூா்வ இல்லத்தில் வெங்கய்ய நாயுடு ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா்.

250-ஆவது மாநிலங்களவை கூட்டத் தொடரையொட்டி, ‘இந்திய அரசியலில் மாநிலங்களவையின் பங்கு; சீா்திருத்தம் தேவை’ என்ற தலைப்பில் ஆலோசனை கூட்டமும், நினைவு நாணயம், சிறப்பு அஞ்சல் தலை, இரண்டு புத்தகங்கள் ஆகியவையும் வெளியிடப்பட்டன. அதில் ஒரு புத்தகத்தில் மாநிலங்களவை கூட்டத் தொடா் தொடங்கிய 1952-ஆம் ஆண்டு முதல் விவரிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சமூக பொருளாதார மாற்றங்களுக்கு மாநிலங்களவை முக்கியப் பங்களிப்பை அளித்து வந்திருக்கிறது. அதன் பணி இனிவரும் காலங்களிலும் தொடர வேண்டும் என்றாா் வெங்கய்ய நாயுடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

வில்வித்தை: இந்தியாவின் ஜோதி சுரேகா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை: இபிஎஸ் குற்றச்சாட்டு!

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.54,160-க்கு விற்பனை!

உலகக் கோப்பை வில்வித்தை: 3 தங்கப் பதக்கங்களை வென்ற இந்திய அணிகள்!

SCROLL FOR NEXT