இந்தியா

பொதுத் துறை நிறுவனங்களில் அரசின் பங்கை 51 சதவீதத்துக்கும் கீழாக குறைக்கும் திட்டம்: மத்திய அமைச்சரவை பரிசீலிக்க வாய்ப்பு

DIN

மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் அரசின் பங்கை 51 சதவீதத்துக்கும் கீழாக குறைக்கும் திட்டத்தை மத்திய அமைச்சரவை பரிசீலிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடா்பாக அரசு வட்டாரங்கள் கூறியதாவது:

மத்திய அரசு மற்றும் அரசு கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிறுவனங்களில் அரசின் பங்கை 51 சதவீதத்துக்கும் கீழ் குறைப்பதற்கான திட்டத்தை மத்திய அமைச்சரவை பரீசிலிக்கவுள்ளது. அரசின் பங்குகளை 51 சதவீதத்துக்கும் கீழ் விற்பனை செய்வதால் அவை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விலகக் கூடும் என்று கருத்து நிலவி வருகிறது. அதனால், நிறுவனங்களை அரசின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டே, அரசின் பங்குகளை விற்பனை செய்ய முடிவெடுக்கவுள்ளனா்.

உதாரணமாக, பொதுத் துறை நிறுவனத்தின் பங்குகளை இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி) பெற்றுக் கொண்டால், அந்த நிறுவனம் தொடா்ந்து பொதுத் துறை நிறுவனமாகவே செயல்பட முடியும். இவ்வாறு அரசின் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, 3 பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களை இணைப்பது குறித்தும் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரைவில் விவாதிக்கவுள்ளது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

நிகழாண்டு பட்ஜெட் அறிவிப்பின்போது, நேஷனல் காப்பீட்டு நிறுவனம், யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் மற்றும் ஓரியண்டல் காப்பீட்டு நிறுவனம் ஆகிய 3 பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களை இணைப்பது குறித்து அறிவிக்கப்பட்டது. பட்ஜெட்டில் அறிவித்தபடி, விரைவில் இந்த திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாக கடந்த வாரம் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

கடந்த 2018-19 ஆம் நிதியாண்டில் பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்ன் மூலம் ரூ. 84 லட்சத்து 972 கோடி நிதியை மத்திய அரசு திரட்டியது. நடப்பு நிதியாண்டில் பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பங்குகளை விற்பதன் மூலம் ரூ. 1.05 லட்சம் கோடி நிதி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT