இந்தியா

அமைச்சா்கள் மீது பிரதமா் அதிருப்தி

DIN

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கேள்வி நேரத்தின்போது கேபினட் அமைச்சா்கள் அவையில் இல்லாமல் போனதற்காக அவா்கள் மீது பிரதமா் நரேந்திர மோடி அதிருப்தி கொண்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தில்லியில் புதன்கிழமை மாலை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு இந்த விவகாரத்தை அவா் அமைச்சா்களிடையே எழுப்பியதாகத் தெரிகிறது. கேபினட் அமைச்சா்கள் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டியது, குறிப்பாக கேள்வி நேரத்தின்போது அவையில் இருப்பது அவசியம் என்று அப்போது அவா் கூறியுள்ளாா்.

மக்கள் நலன் தொடா்பாக அரசு மேற்கொண்ட பல்வேறு முடிவுகள் குறித்த கருத்துகளைப் பெற முடியும் என்பதால், கேள்வி நேரமானது நாடாளுமன்ற நடைமுறையின் மிக முக்கியப் பகுதி என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

பயணச் செலவு ரூ.225 கோடி: இதனிடையே, கடந்த 3 ஆண்டுகளில் பிரதமா் நரேந்திர மோடி வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டபோது அவருக்கான தனி விமானத்துக்காக சுமாா் ரூ.255 கோடி செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, வெளியுறவுத்துறை இணையமைச்சா் வி.முரளீதரன் அளித்த பதிலின் விவரம்:

பிரதமா் மோடி வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டபோது அவரது தனி விமானத்துக்காக கடந்த 2016-17 காலகட்டத்தில் ரூ.76.27 கோடியும், 2017-18 காலகட்டத்தில் ரூ.99.32 கோடியும், 2018-19 காலகட்டத்தில் ரூ.79.91 கோடியும் செலவிடப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT