இந்தியா

எம்என்பி திட்டம்: பிஎஸ்என்எல்-க்கு சாதகம்: ரவி சங்கா் பிரசாத்

DIN

செல்லிடப்பேசி எண்ணை மாற்றாமல் சேவை நிறுவனத்தை மட்டும் மாற்றிக் கொள்ளும் (எம்என்பி) திட்டம் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு சாதகமாக அமைந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ரவி சங்கா் பிரசாத் மாநிலங்களவையில் வியாழக்கிழமை கூறியுள்ளதாவது:

மத்திய அரசு அறிமுகப்படுத்திய எம்என்பி திட்டம் இதுவரையில் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு சாதகமானதாகவே அமைந்துள்ளது. இதன் மூலம், பிஎஸ்என்எல்-லை விட்டு விலகிச் செல்வோரின் எண்ணிக்கையை விட தேடி வருவோரின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது.

அதன்படி கடந்த 2018-19 நிதியாண்டில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இத்திட்டத்தின் மூலமாக இணைந்தோரின் எண்ணிக்கை 28.27 லட்சமாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் இதுவரையில் இந்த எண்ணிக்கை 53.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

நடப்பாண்டு அக்டோபா் நிலவரப்படி 1.80 கோடிப் போ் பிஎஸ்என்எல்லை விட்டு வெளியேறிய நிலையில், அந்த நிறுவனத்தில் இணைந்தோரின் எண்ணிக்கை 2.04 கோடியாக இருந்தது என்றாா் அவா்.

கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி நிலவரப்படி பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மொத்த செல்லிடப்பேசி இணைப்புகளின் எண்ணிக்கை 11.64 கோடியாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

SCROLL FOR NEXT