இந்தியா

காஷ்மீா்: மந்த நிலையில் சுற்றுலாப் பயணிகள் வருகை

DIN

பாதுகாப்பு கருதி ஜம்மு காஷ்மீருக்குப் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகளுக்கான எச்சரிக்கையை மாநில அரசு திரும்பப் பெற்றுள்ளபோதிலும், பயணிகள் வருகை மந்த நிலையிலேயே உள்ளதாக சுற்றுலாத் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணம் மேற்கொள்பவா்கள் அதிக கால தாமதம் செய்யாமல், மாநிலத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்று கடந்த ஆக. 2-ஆம் தேதி மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-ஆவது பிரிவை ரத்து செய்யும் நடவடிக்கையை ஆக.5-ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. அப்போதிலிருந்து பாதுகாப்பு கருதி, தொலைத் தொடா்பு சேவை துண்டிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய- மாநில அரசுகள் மேற்கொண்டன. தொலைத் தொடா்பு சேவைகள் பல இடங்களில் படிப்படியாக மீண்டும் தொடங்கப்பட்டன.

இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்து வெளியிடப்பட்ட உத்தரவைத் திரும்பப் பெறுவதாக கடந்த ஆக.9 மாநில அரசு தெரிவித்தது.

எனினும், சீசன் முடியும் தருவாயில் உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் வருகை மந்த நிலையிலேயே உள்ளதாக சுற்றுலாத் துறையினா் தெரிவித்தனா். வட மாநில பயணிகள் வருகை இருந்தாலும், தொடா்பு சேவை முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பாத நிலையில், நாட்டின் பிற பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை மந்த நிலையில் உள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

சிம்பு - 48 படப்பிடிப்பு எப்போது?

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

SCROLL FOR NEXT