இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் பாக்., ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல்: பாதுகாப்புப் படையினர் பதிலடி

DIN


ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாகவும், பாதுகாப்புப் படையினர் அதற்கு தக்க பதிலடி தருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பாதுகாப்புப் படையினர் வட்டாரங்கள் தெரிவிக்கையில், "பாகிஸ்தான் ராணுவத்தினர் ஜம்மு-காஷ்மீரின் ஹிரா நகரில் நேற்று இரவு அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் பொது மக்களை குறிவைத்தே நடத்தப்பட்டது. எனினும், எல்லைப் பாதுகாப்புப் படையினர் இதற்குத் தக்க பதிலடி தந்தனர். இந்த சண்டை இன்று அதிகாலை 5.30 மணி வரை நடைபெற்றது" என்றனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் தொடர்ந்து தனது கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் பதிவு செய்து வருகிறது. இவ்விவகாரத்தை சர்வதேச அளவில் கொண்டு செல்ல பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முயற்சித்தார். ஆனால், பல இடங்களில் அது எடுபடாத போதிலும், பாகிஸ்தான் தொடர்ந்து தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரை கொல்ல முயற்சி: 6 போ் கைது

அன்னையா் தின விழா

மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

கம்பம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் பதிவான 700 பத்திரங்கள் மறு கள ஆய்வு

திண்டுக்கல்லில் 89.97 சதவீதம் போ் தோ்ச்சி

SCROLL FOR NEXT