இந்தியா

எல்லையில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 35 லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் பலி?

DIN

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 35 லஷ்கர்-இ-தொய்பா  பயங்கரவாதிகள் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அமைநதுள்ள 7 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவப் படைகள் ஞாயிறன்று காலை தாக்குதல் நடத்தின. 

முதலில் இந்த தாக்குதலில்  4 முதல் 5 பாக். ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக இந்திய ராணுவத் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் இந்த தாக்குதலில் பயங்கரவாத முகாம்களில் இருந்த 35 பயங்கரவாதிகள் பலியானதாகவும், அவரகள் அனைவரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

இந்நிலையில் காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து ராணுவ தளபதி பிபின் ராவத்துடன், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை செய்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

எல்லையில் நிலவும் சூழல் குறித்து அவ்வப்போது தெரிவிக்குமாறு ராணுவ தளபதியிடம் தொலைபேசி மூலம் ராஜ்நாத் சிங் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT