இந்தியா

பிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி

DIN

மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி குறும்படம் வெளியிட்டார். தலைநகர் தில்லியில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியை சிறப்பிக்கும் விதமாக குறும்படம் வெளியிடப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான ஷாருக்கான், அமீர் கான், கங்கனா ரணாவத், சோனம் கபூர், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், போனி கபூர், ஏக்தா கபூர், இம்தியாஸ் அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

அதில் பேசியதாவது, 

மகாத்மா காந்திக்கு புகழஞ்சலி செலுத்த நாம் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். அவருடைய போதனைகளை பரப்புவதில் திரைத்துறை பெரும் பங்காற்றி வருகிறது. 1947 வரையிலான சுதந்திரப் போராட்ட எழுச்சியையும், 1947 முதல் 2022  ஆம் ஆண்டு வரையிலான நாட்டின் வளர்ச்சியையும் திரைத்துறை எடுத்துரைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து பிரதமர் மோடியுடன் பாலிவுட் பிரபலங்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

SCROLL FOR NEXT