இந்தியா

ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு

DIN


ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக சிபிஐ தொடுத்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளிக்கவுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம் தொடர்பாக, ப.சிதம்பரத்தை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி கைது செய்தனர். அவர், தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஜாமீன் வழங்கக் கோரி, தில்லி தில்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார், அவரது ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் செப்டம்பர் 30-ஆம் தேதி நிராகரித்து விட்டது. 
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவரது சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ். போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த 18-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்குதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டால், அவர் சாட்சிகளைக் கலைத்து விடுவதற்கு பாய்ப்புள்ளது என்று அவர் வாதிட்டார்.
ஆனால், சிபிஐ தரப்பின் குற்றச்சாட்டுகளுக்கு சிதம்பரம் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோர் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ஜாமீன் மனு மீதான தீர்ப்பை செவ்வாய்க்கிழமைக்கு (அக்.22) நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT