இந்தியா

மனசாட்சிப் படி பதிலளியுங்கள்: சித்தராமையாவுக்கு குமாரசாமி பதிலடி

DIN

கர்நாடகத்தில் ஜேடியு, காங்கிரஸ் கூட்டணியின் 14 மாத கால அரசு கவிழ்ந்தது குறித்து மனசாட்சிப் படி பதிலளிக்குமாறு சித்தராமையாவுக்கு குமாரசாமி பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக ஜேடியு தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான குமாரசாமி தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டதாவது,

யாருடைய தவறால் கர்நாடக அரசு கவிழ்ந்தது? இந்த தோல்விக்கு யார் காரணம்? இதை யார் ஏற்படுத்தியது? மக்களவைத் தேர்தலில் உங்களின் பங்களிப்பு என்ன? தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ-க்களின் பின்னணிக்கு யார் காரணம்? என்னை மட்டும் குறிவைத்து தினமும் விமர்சித்தது யார்? தயவு செய்து இந்த கேள்விகளுக்கு எல்லாம் நீங்கள் மனசாட்சிப் படி பதிலளிக்க வேண்டும்.

நாங்கள் யாரிடமும் கூட்டணிக்காக கையேந்தவில்லை. ஆட்சியமைக்க கூட்டணி வேண்டி நீங்கள் தான் எங்கள் கதவைத் தட்டினீர்கள். நீங்கள் எனக்கு செய்த அனைத்து வித உதவிகளுக்கும் என மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் உதவியை என் வாழ்நாள் முழுவதும் நான் மறக்க மாட்டேன். இனியும் உங்கள் தயவு எனக்கு தேவையில்லை என்று தெரிவித்தார்.

முன்னதாக, கர்நாடகத்தில் காலியான 15 பேரவைத் தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடந்து அதில் காங்கிரஸ் வென்றிருந்தால், இந்நேரம் எடியூரப்பா பதவி விலகியிருக்க வேண்டியது. பின்னர் ஜேடியு உடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி புதிய தேர்தலை சந்தித்திருக்கும் என காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான சித்தராமையா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT