புது தில்லி: வளர்ச்சியே இல்லாத நூறு நாட்களுக்காக மோடிக்கு வாழ்த்துக்கள் என்று காங்கிரசின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.
இரண்டாவது முறையாக மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்று ஞாயிறோடு நூறு நாட்களை நிறைவு செய்கிறது. இதற்காக பல்வேறு தரப்பினரும் மோடிக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இந்நிலையில் வளர்ச்சியே இல்லாத நூறு நாட்களுக்காக மோடிக்கு வாழ்த்துக்கள் என்று காங்கிரசின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
வளர்ச்சியே இல்லாத நூறு நாட்களுக்காக மோடிக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து அழிக்கப்பட்டு வரும் ஜனநாயகம், விமர்சனத்தை இல்லாமல் செய்வதற்காக கழுத்து நெறிக்கப்படும் ஊடகங்கள் மற்றும் சீரழிந்துள்ள பொருளாதாரத்தை சீரமைக்க சிறந்த தலைமைப் பண்பு , சரியான திட்டமிடலும், பயணமும் அவசியமாகத் தேவைப்படுகிறது.
இவ்வாறு அவர் பதிவு செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.