இந்தியா

தில்லியில் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் செலுத்திய லாரி முதலாளி

DIN

மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதா -2019 அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதில் போக்குவரத்து விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. 

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு கடுமையான அபராதம் விதிக்கவும் இந்தச் சட்டத்தில் வழிவகுக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய சட்டம் நாடு முழுவதும் செப்டம்பர் 1-ஆம் தேதி அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தானைச் சேர்ந்த லாரி முதலாளிக்கு தில்லியில் ரூ.1,41,700 அபராதம் விதித்து போக்குவரத்து போலீஸார் செப். 5-ஆம் தேதி நடவடிக்கை எடுத்துள்ளனர். இதையடுத்து அந்த அபராதத் தொகையை சம்பந்தப்பட்ட லாரி முதலாளி தில்லி ரோஹினி நீதிமன்றத்தில் செப். 9-ஆம் தேதி செலுத்தினார்.

குறிப்பிட்ட அளவை விட கூடுதல் பாரம் ஏற்றியிருந்த காரணத்தால் தில்லி போக்குவரத்து போலீஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

புதிய போக்குவரத்து விதிமீறல் அபராதத்தின் அடிப்படையில் வாகனங்களில் குறிப்பிட்ட அளவை விட அதிக பாரம் ஏற்றியிருந்தால் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக ஒவ்வொரு டன் எடைக்கும் ரூ.2 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும்.

முன்னதாக, அதிக பாரம் இருந்தால் ரூ.2 ஆயிரம் மற்றும் ஒவ்வொரு கூடுதல் டன் எடைக்கும் ரூ. ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

SCROLL FOR NEXT