இந்தியா

மாநில அரசுகள் விரும்பினால் போக்குவரத்து விதிமீறல் அபராதத் தொகையை குறைத்துக்கொள்ளலாம்: நிதின் கட்கரி

DIN

மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதா -2019 அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதில் போக்குவரத்து விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. 

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு கடுமையான அபராதம் விதிக்கவும் இந்தச் சட்டத்தில் வழிவகுக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய சட்டம் நாடு முழுவதும் செப்டம்பர் 1-ஆம் தேதி அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், மாநில அரசுகள் விரும்பினால் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகையை குறைத்து கொள்ளலாம் என்று மத்திய சாலை, கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி புதன்கிழமை தெரிவித்தார்.

சாலை விதிகளை இளைஞர்கள் மதிப்பதில்லை, விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்கவே அபராதம் உயர்த்தப்பட்டது. அரசின் வருமானத்தை அதிகரிக்க கிடையாது எனவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT