தேவிபட்டணம் (கோதாவரி): ஆந்திராவின் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து நிகழ்ந்த விபத்தில் இதுவரை 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டம தேவிபட்டணம் பகுதியில் பாயும் கோதாவரி ஆற்றில் ஞாயிறன்று சுற்றுலா படகு ஒன்றில் 61 பேர் பயணம் செய்துள்ளனர். அளவுக்கு அதிகமான பாரம் காரணமாக பயணத்தின்நடுவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகில் இருந்தவர்கள் யாரும் பாதுகாப்பு உடைகள் அணியாத காரணத்தால் பலர் தண்ணீரில் மூழ்கினர். அவர்களில் 21 பேர் மட்டும் நீந்தி கரை சேர்ந்ததாக உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றது.
சம்பவம் குறித்த தகவல் அறிந்தவுடன் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தண்ணீரில் மூழ்கியவர்களை, உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 11 பேரின் உடல்களை மீட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எஞ்சியுள்ளவர்களை தேடும் பணி துரிதமாக நடந்து வருகிறது. அவர்களில் பலர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.