இந்தியா

இணையவழி குற்றங்களைத் தடுப்பதற்கு தனிச் சட்டம், பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு தேவை: சைபர் பாதுகாப்பு பிரிவு

DIN


தேசிய அளவில் இணையவழிக் குற்றங்களை விசாரிப்பதற்கு தனிச் சட்டம் வகுக்கப்பட வேண்டும் என்று சைபர் பாதுகாப்பு மையத்தின் (டிசிஏ) தலைவர் மோஹித் குப்தா கூறியுள்ளார். பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்றும், தனிப் படை உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இணையவழிக் குற்றங்களை விசாரிப்பதற்காக, முப்படைகளின் சார்பில் புதிதாக சைபர் பாதுகாப்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக, கடற்படை அதிகாரி மோஹித் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
புணே நகரில் உள்ள ராணுவ தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது:
தற்போது நடைமுறையில் இருக்கும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் கடந்த 2008-ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. அந்தச் சட்டத்தில், இணையவழிப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு போதிய சட்டப் பிரிவுகள் இல்லை. எனவே, அந்த சட்டத்தை திருத்த வேண்டியுள்ளது. இணையவழி பாதுகாப்புக்காக சில நாடுகளில் தனிச் சட்டங்கள் உள்ளன. சில நாடுகளில் தகவல் தொழில்நுட்பச் சட்டத்துடன் அவை சேர்க்கப்பட்டுள்ளன. இணையவழி பாதுகாப்புக்கென தனிச் சட்டம் இயற்றப்படுவதே சரியானதாக இருக்கும்.
இதுதவிர, இணையவழிப் பாதுகாப்புக்காக, பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அதாவது, தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் குறைந்தது 10 சதவீதம், இணையவழிப் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட வேண்டும். மேலும், இணைய வழிக் குற்றங்களை விசாரிப்பதற்கு தனிப் படைப் பிரிவு உருவாக்கப்பட வேண்டும். இணையவழிப் பாதுகாப்பு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்; பள்ளிப் பாடங்களிலும் அது சேர்க்கப்பட வேண்டும்.
இணையவழி பாதுகாப்பு குறித்து விரிவான கொள்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்தக் கொள்கையை பிரதமர் அலுவலகம் விரைவில் வெளியிடவுள்ளது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

யாரோ பிரிகிற்பவரே?

நாளை நடைபெற இருந்த பாஜக ஆலோசனைக் கூட்டம் ரத்து

மானும் நீயே மயிலும் நீயே

தொல்காப்பியத்தை முதலில் பதிப்பித்த மழவையார்

SCROLL FOR NEXT