இந்தியா

பஞ்சாப் முதல்வர், அமைச்சர்கள் கர்தார்பூர் வழித்தட திறப்பு தினத்தன்று நேரில் ஆய்வு

கர்தார்பூர் வழித்தடம் வரும் நவம்பர் மாதம் 9-ஆம் தேதி திறக்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்தது.

DIN

சீக்கிய மதத்தை நிறுவியவரும் அதன் முதல் குருவுமான குருநானக்கின் 550-ஆவது பிறந்த தினம், வரும் நவம்பரில் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, கர்தார்பூர் வழித்தடம் வரும் நவம்பர் மாதம் 9-ஆம் தேதி திறக்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்தது.

பஞ்சாபின் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவில் இருந்து எல்லைப் பகுதி வரையிலான வழித்தடத்தை இந்தியாவும், கர்தார்பூரிலிருந்து எல்லைப் பகுதி வரையிலான வழித்தடத்தை பாகிஸ்தானும் தர்பார் சாஹிப் குருத்வாரா வரை சாலை வழித்தடம் அமைத்து வருகின்றன. 

இந்தியப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் வழித்தடத்தின் கட்டுமானப் பணிகளை பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் வியாழக்கிழமை பார்வையிட்டார்.

இந்நிலையில், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், மாநில அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள், மத்திய அரசின் பிரதிநிதிகள் உட்பட அனைவரும் நவம்பர் 9-ஆம் தேதி கர்தார்பூர் வழித்தடம் முழுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்யவுள்ளதாக பஞ்சாப் அமைச்சர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்: ஓடுதளத்தில் மற்றொன்று! திக் திக் நிமிடங்கள்.. நடந்தது என்ன?

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

கோவையில் ரேஷன் கடையை அடித்து நொறுக்கிய காட்டு யானை!

கொலை வழக்கை முறையாக விசாரிக்காததால்.. சூலூர் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

இந்த சாதனையைச் செய்த முதல் இந்திய சினிமா கூலிதான்!

SCROLL FOR NEXT