இந்தியா

சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: 70 வயது பாதிரியார் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்கு

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக 70 வயது பாதிரியார் மீது போக்úஸா சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

DIN


கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக 70 வயது பாதிரியார் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போலீஸார் கூறியதாவது:
எர்ணாகுளம் மாவட்டம், சேந்தமங்கலம் பகுதியில் உள்ள சிரியன் கத்தோலிக்க தேவாலயத்தில் கடந்த மாதம் தன்னிடம் ஆசி பெற வந்த 9 வயதுடைய 
மூன்று சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பாதிரியார் ஜார்ஜ் படயாட்டி மீது வடக்கேகரா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் (போக்ஸோ) இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
தலைமறைவாக உள்ள ஜார்ஜ் படயாட்டியை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக சிரோ-மலபார் திருச்சபை வட்டாரங்கள் கூறுகையில், தேவாலயப் பணியிலிருந்து அவரை இடைநீக்கம் செய்து, எர்ணாகுளம்-அங்கமாலி கத்தோலிக்க மறைமாவட்டம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 
காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்கவும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றுதெரிவித்தன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போலீஸ் டாக்டர்... ஜனனி அசோக் குமார்!

வெண்ணிலவே... வெண்ணிலவே... கஜோல்!

நீயாக இரு... ஐஸ்வர்யா ராஜேஷ்!

இரவில் சென்னை, 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

என் வாழ்வைக் காதலிக்கிறேன்... எடின் ரோஸ்!

SCROLL FOR NEXT