இந்தியா

நாடு முழுவதும் பெண்கள்  மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகள் எவ்வளவு தெரியுமா?

Muthumari

நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் 389 மாவட்டங்களில் தலா 100 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், மொத்தமாக 1.66 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரானவை என்றும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் கோரிக்கையாக இருக்கிறது. இந்த நிலையில், இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகம் ஒரு முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவற்றில் 100 வழக்குகளைத் தாண்டிய மாவட்டங்கள் 389 என கணக்கிடப்பட்டுள்ளது. இவையனைத்தும் போக்ஸோ(POCSO) சட்டத்தின் கீழ் உள்ள வழக்குகள். எனவே, இந்த வழக்குகளை விரைந்து விசாரிக்க மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் விரைவு நீதிமன்றம் ஒன்று அமைக்கப்படும்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்படும் இந்த நீதிமன்றங்கள் நிலுவையில் உள்ள வழக்குகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரித்து முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்படும். போக்ஸோ சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்குகளைத் தவிர வேறு எந்த வழக்குகளையும் இந்த நீதிமன்றங்கள் விசாரிக்காது. அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்களுடன் கலந்தாலோசித்து நீதிமன்றம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும். மேலும், ஒரு மாநிலத்தில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையைப் பொறுத்து கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

மேலும், மொத்தமாக 1.66 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க 1,023 விரைவு சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. ஆண்டுக்கு 165 வழக்குகள் இந்த சிறப்பு நீதிமன்றங்களின் மூலமாக தீர்த்து வைக்கப்படும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றங்களை அமைக்கும் பணியானது வருகிற அக்டோபர் 2ம் தேதி முதல் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT