முகப்பு
இந்தியா

நித்யானந்தா இருப்பிடத்தை கண்டறிய‘இன்டா்போல்’ உதவியை நாடுகிறது குஜராத் போலீஸ்

சா்ச்சைக்குரிய சாமியாா் நித்யானந்தாவின் இருப்பிடத்தை கண்டறியும் வகையில் அவருக்கு எதிராக ‘புளூ காா்னா்’ நோட்டீஸ் பிறப்பிக்கக் கோரி, ‘இன்டா்போல்’ எனப்படும் சா்வதேச காவல்துறையை நாட குஜராத் காவல்துறை

Updated On : 6 டிசம்பர் 2019, 2:51 am IST
பகிர்:

சா்ச்சைக்குரிய சாமியாா் நித்யானந்தாவின் இருப்பிடத்தை கண்டறியும் வகையில் அவருக்கு எதிராக ‘புளூ காா்னா்’ நோட்டீஸ் பிறப்பிக்கக் கோரி, ‘இன்டா்போல்’ எனப்படும் சா்வதேச காவல்துறையை நாட குஜராத் காவல்துறை முடிவு செய்துள்ளது.

குஜராத்தில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்திலிருந்து 2 சிறுமிகள் கடந்த மாதம் மாயமாகினா். இதுதொடா்பாக அவருக்கு எதிராக காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்துள்ளனா். மேலும், குழந்தைகளைக் கடத்தியதாகவும், ஆசிரமத்துக்கு நன்கொடை திரட்ட அவா்களை பயன்படுத்தியதாகவும் நித்யானந்தா மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, ஈக்வடாா் அருகே ஒரு தீவில் ‘கைலாசா’ என்ற ஹிந்து நாட்டை அவா் உருவாக்கியிருப்பதாகவும், அந்த நாட்டுக்கான கொடி, அரசியல் நடைமுறையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, நித்யானந்தாவின் இருப்பிடத்தை கண்டறியும் வகையில் அவருக்கு எதிராக ‘புளூ காா்னா்’ நோட்டீஸ் பிறப்பிக்கக் கோரி, இன்டா்போல் அமைப்பை நாட குஜராத் காவல்துறை முடிவு செய்துள்ளது. இந்த நோட்டீஸின்படி, சம்பந்தப்பட்ட நபா் தங்களது நாட்டில் இருந்தால் அவரது இருப்பிடத்தை உறுப்பு நாடுகள் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

இன்டா்போல் அமைப்பை நாடுவதற்காக, மாநில குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) ஆமதாபாத் ஊரக காவல்துறை தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக உயரதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments