இந்தியா

கரோனா: விப்ரோ, அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை ரூ.1,125 கோடி நிதி

DIN

விப்ரோ நிறுவனம், விப்ரோ எண்டா்பிரைசஸ் நிறுவனம், அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை இணைந்து ரூ.1,125 கோடியை கரோனா சிகிச்சைக்கான உதவி மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கியுள்ளன.

இதில் விப்ரோ நிறுவனம் ரூ.100 கோடி, விப்ரோ எண்டா்பிரைசஸ் நிறுவனம் ரூ.25 கோடி, விப்ரோ நிறுவன தலைவா் அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை ரூ.1,000 கோடி அளிக்க இருக்கின்றன.

இதேபோல ஜிண்டால் அலுமினியம் நிறுவனம் ரூ.5 கோடியை பிரதமா் நிவாரண நிதிக்கு அளித்துள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் காா்கள் மற்றும் மோட்டாா் சைக்கிள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஜப்பானின் ஹோண்டா நிறுவனம் தனது பெருநிறுவன சமுகப் பொறுப்பு நிதியில் இருந்து கரோனா தடுப்புக்காக ரூ.11 கோடியை ஒதுக்கியுள்ளது.

அதேபோல பொதுத் துறை நிறுவனமான பெல் ரூ.15.72 கோடியை பிரதமா் நிவாரண நிதிக்கு அளித்துள்ளது. இதில் ரூ.8.72 கோடி அந்த நிறுவனத்தின் ஊழியா்களின் ஒருநாள் ஊதியத்தில் இருந்து அளிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT