இந்தியா

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு ஆயிரத்தை எட்டியது

DIN

இந்தியாவில் முதல் முறையாக மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை ஆயிரத்தை எட்டியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது 1,078 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 60 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 44 பேர் பிரிஹன்மும்பை மாநகராட்சிப் பகுதியைச் சேர்ந்தவர்கள். 9 பேர் புணேவையும், 4 பேர் நாக்பூரையும், ஆகமத்நகரைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 773 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் இந்தியாவில் கரோனா பாதிப்பு 5,194 ஆக உயர்ந்துள்ளது, உயிரிழப்பு 149 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வநத 45 வயது நபர் மரணம் அடைந்ததை அடுத்து தமிழகத்தில் மட்டும் கரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

பல்வே மாநிலங்களில் இருந்து, ஊரடங்கை நீட்டிக்குமாறு பரிந்துரை வந்திருப்பதாகவும், அதையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கை ஏப்ரல் 14ம்  தேதிக்குப் பிறகும் நீட்டிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

புது தில்லியில் 51 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அங்கு மொத்த எண்ணிக்கை 576 ஆக உயர்ந்துள்ளது. இந்த 51 பேரில் 35 பேர் வெளிநாடு சென்று வந்தவர்கள் என்பதும், 4 பேர் தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT