உத்தரப்பிரதேச போலீஸாருக்கு ரூ.50 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினருக்கு காப்பீட்டுத் தொகையை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். அதன்படி, மாநில போலீஸாருக்கு ரூ.50 லட்சம் வரையில் காப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, போலீஸார் மற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் கூடுதல் சுகாதாரக் காப்பீடு வழங்குவதாக பஞ்சாப் அரசு அறிவித்திருந்தது. அதேபோன்று மத்தியப் பிரதேச அரசும் போலீஸார், சுகாதாரப் பணியாளர்கள், அரசு ஊழியர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீடு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.