நாடு முழுவதும் 170 மாவட்டங்கள் கரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத் துறை செயலாளர் லாவ் அகர்வால் கூறியதாவது:
இந்தியாவில் இதுவரை சமூகப் பரவல் நிலை இல்லை. உள்ளூரில் சில பரவல்கள் உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 270 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 1,076 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கரோனா வைரஸால் இந்தியாவில் 377 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.
கரோனா வைரஸ் நோயாளிகளில் 11.41 சதவீதம் பேர் நோய்த்தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். அதாவது இதுவரை 1,306 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 11,439 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மொத்தம் 170 மாவட்டங்கள் கரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளாக(Hotspot) அடையாளம் காணப்பட்டுள்ளன. 207 மாவட்டங்கள் மித பாதிப்பு பகுதிகளாக (Non- Hotspot) கண்டறியப்பட்டுள்ளன.
கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான முறையான நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம்' என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.