கோப்புப்படம் 
இந்தியா

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு மூவாயிரத்தைத் தாண்டியது!

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை மூவாயிரத்தைத் தாண்டியுள்ளது. 

DIN


மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை மூவாயிரத்தைத் தாண்டியுள்ளது. 

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில், கரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலம்தான் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. அங்கு நாளுக்கு நாள் பாதித்தோரின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே இருக்கிறது.

இந்நிலையில், இன்று புதிதாக 165 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,916 லிருந்து 3,081 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று பாதிக்கப்பட்ட 165 பேரில் 107 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கரோனா பாதிப்பு 12,380 ஆகவும் உயிரிழப்பு 414 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகம் உங்கள் கையில் திட்டம்: கல்லூரி மாணவிகளுக்கு மடிக்கணினிகள்

அரசுக் கல்லூரி மாணவா்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம்

வீட்டு மனை பட்டா கேட்டு பழங்குடி மக்கள் நல சங்கம் ஆட்சியரிடம் மனு

சம்பா பருவத்தில் 2,50,000 மெ.டன் நெல் கொள்முதலுக்கு வாய்ப்பு: விவசாயிகளிடமிருந்து மட்டுமே வாங்கப்படுமென அதிகாரிகள் உறுதி

புதுச்சேரியில் காவல் உதவி ஆய்வாளா் தோ்வில் முறைகேடு வெ.வைத்திலிங்கம் எம்.பி. குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT